கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி., மாநாடு படத்தில் இதை கவனிச்சீங்களா., கொந்தளிக்கும் இஸ்லாமிய அமைப்பு.!  - Seithipunal
Seithipunal


மாநாடு பாத்தின் கடைசி காட்சியில்., திமுகவின் வாரிசு அரசியலை நியாயப்படுத்தி எடுத்துள்ளதாக, தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமா அத் என்ற அமைப்பின் தலைவர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் அளித்துள்ள பேட்டியில், "சிலம்பரசன் நடித்த மாநாடு திரைப்படத்தை நேற்று பார்த்தேன். அந்த திரைப்படம் தமிழகத்தினுடைய சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் மிக மோசமான கருத்துகளை உள்ளடக்கியதாக உள்ளது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அந்த திரைப்படத்தில் வரக்கூடிய காட்சிகள் காவல்துறையை மிகக் கேவலமாக இழிவு படுத்தக் கூடியதாக அமைந்திருக்கிறது. 

இந்த திரைப்படத்தின் ஒரு காட்சியில், முதல்வராக நடித்து இருக்கும் நபரை பார்த்து வில்லன் சொல்லுவார்., 'நீங்கள் முதலமைச்சராக இருந்துகொண்டு உங்கள் மகனை முதல்வர் ஆக்க விரும்புகிறீர்கள்., அவர் அவர் மகனை முதல்வர் ஆக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இதனை எதிர்ப்பதற்காக தான் இது போன்ற காரியங்களை நாங்கள் செய்கின்றோம்" என்று வில்லன் கதாபாத்திரம் சொல்கிறது.

இந்த காட்சி மூலம் எங்களுக்கு என்ன புரிகிறது என்றால்., இன்று குடும்ப ஆட்சி நடத்தக்கூடிய கலைஞர் அவர்களிடம் இருந்து திரு ஸ்டாலின்.,  ஸ்டாலின் இடமிருந்து அவருடைய பிள்ளை உதயநிதியை முன் நிறுத்துவதன் மூலம் நியாயப்படுத்துவது போன்று உள்ளது. 

இந்த ஒரு ஒரே ஒரு காட்சி அவர்களின் குடும்ப அரசியலை நியப்படுத்தும் காரணத்தினால், ., அந்த திரைப்படம் முழுக்க காவல்துறையை, இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போன்று சித்தரித்து, இந்துக்களின் உடைய காவி ஆடைகளை இழிவு செய்து வன்முறையாளர்கள் என்று காட்டுவதை தமிழக முதல்வர் கண்டும் காணாமல் போகிறார் என்றே தோன்றுகிறது. இதுபோன்ற ஆபத்தான மத நல்லிணக்கத்துக்கு எதிரான திரைப்படங்களை தடை செய்ய வேண்டும்.

இந்தப் படம் முழுக்கவே வன்முறைக் களமாக உள்ளது. இந்த படத்தை காட்சிகளை நீக்காமல் சர்ச்சைக்குரிய காட்சிகளை அமைத்து, அப்படியே வெளியிடப்பட்டுள்ளது என்பது தான் புரியாத புதிராக உள்ளது. தமிழக முதல்வர் இந்தப்படத்தில் தலைப்பட்டு படத்தில் வரக்கூடிய இஸ்லாமியர்களின், இந்துக்களையும் அவர்களது அடையாளங்களோடு வன்முறையாளர்கள் காட்டக்கூடிய அந்த காட்சிகளை நீக்க வேண்டும். காவல்துறையினர் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து ஆபத்தான கருத்தை நீக்க வேண்டும்." என்று வேலூர் இப்ராஹிம் கோரிக்கை வைத்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Ibrahim warn to maanadu team


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal