முதல்வர் ஸ்டாலினை பாராட்டி, நன்றி தெரிவித்த ஆளுநர் ஆர்என் ரவி! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நடத்திய அத்துமீறல் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக இந்திய ராணுவம் காட்டும் வீரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னை காவல்துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து தீவுத்திடல் போர் நினைவுச்சின்னம் வரை இன்று மாலை 5 மணிக்கு பேரணி நடைபெறுகிறது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கிய இந்த பேரணியில், அமைச்சர்கள், எம்பிக்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர். அனைவரும் கையில் தேசியக் கொடியுடன் இந்திய ராணுவத்திற்கு ஒற்றுமையான ஆதரவை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், இந்த பேரணிக்கு பாராட்டும், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியையும் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார்.

அதில், "பாகிஸ்தானிய ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக நாட்டை துணிச்சலுடனும் வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ஆயுதப் படைகளுடன் நமது 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இன்று மாலையில் பிரம்மாண்டமான மக்கள் பேரணியை நடத்துவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். 

நமது ஆயுதப் படைகளுடன் நமது தேசம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் துணைநிற்பது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து நமது தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது" என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNG RN Ravi wish and thanks to CM Stalin


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->