இப்போதே CM ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது - சொல்கிறார் நயினார் நாகேந்திரன்!
TN CM MK Stalin fear about ADMK BJP Alliance BJP Nainar Nagendran
நெல்லை பெருமாள்புரத்தில் இன்று நிருபர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை தெரிவித்துள்ளார்..
"முதலமைச்சருக்கு தற்போது தோல்வி பயம் ஏற்பட்டு விட்டது. அதனால்தான் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அவரவர் தொகுதிகளில் இருந்து பணியாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது கடந்த நான்கு ஆண்டுகளாக எம்.எல்.ஏ.க்கள் செயலற்ற நிலையில் இருந்தனர் என்பதையே நன்கு காட்டுகிறது" என்றார்.
மேலும், "திமுக கூட்டணியை விமர்சிப்பது அவர்களுக்கு உரிமையாக இருப்பது போல், எதிர்க்கட்சி கூட்டணியை விமர்சிப்பதும் நியாயமானதே.
ஆனால், அதையே முதல்-அமைச்சர் சொல்லும் போது, அது தோல்வி பயத்தின் வெளிப்பாடு தான்" என்றும் குற்றம்சாட்டினார்.
"ஆளுநரை தொடர்ந்து விமர்சித்த திமுக, சட்டமன்றத்திலும் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியது. இப்போது ஆளுனருடன் எந்தபோட்டியும் இல்லை என்று கூறுவது பெரும் சிரிப்பை ஏற்படுத்துகிறது" என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
English Summary
TN CM MK Stalin fear about ADMK BJP Alliance BJP Nainar Nagendran