திருத்தணியில் காங்கிரஸ் பிரமுகர் கொலை: பெரும் பரபரப்பு!
thiruthani congress rajendran murder
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அம்மையார்குப்பத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நகர துணைத் தலைவர், நெசவுத் தொழிலாளி ராஜேந்திரன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
அவர் தனது வீட்டின் பின்புறத்தில், தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டார்.
தொகுதியைச் சேர்ந்த சிலர் கஞ்சா புகைக்கும் விவகாரத்தில் ராஜேந்திரன் கண்டித்ததாகவும், அதனால் ஏற்பட்ட சண்டையிலேயே அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
தகவலறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ராஜேந்திரன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இரும்புக் கம்பிகளைத் திருட முயன்ற மர்மநபர்களின் தாக்குதலா என்ற கோணத்திலும், சமூக விரோதிகளுடன் ஏற்பட்ட தகராறா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மர்மமான இக்கொலை திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
thiruthani congress rajendran murder