நேற்று பிறந்தவர்கள், நேற்று கட்சி தொடங்கியவர்கள், அரசியலுக்கு அரிச்சுவடே தெரியாதவர்கள் எல்லாம் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்: முதலமைச்சர் பேச்சு..! - Seithipunal
Seithipunal


மாற்றுக்கட்சியில் இருந்து விலகி திமுக-வில் இணையும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது தலைமையினான திமுக அரசு பதவியேற்று நாளை 05-ஆம் ஆண்டு தொடங்குகிறது. 07-வது முறையாக திமுகவே ஆட்சியமைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் அத்துடன், இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆட்சி, மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும் ஆட்சி, ஒன்றிய அரசுக்கே வழிகாட்டும் ஆட்சி திமுக ஆட்சிதான் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள். நேற்று கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர். அரசியலுக்கு அரிச்சுவடே தெரியாதவர்கள் எல்லாம் அடுத்த முதலமைச்சர்.  என்று பேசக்கூடிய நிலைதான் உள்ளது என்று சுட்டிக்காட்டிய முதலமைச்சர், நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதே இல்லை என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Chief Minister speech that everyone who started the party yesterday and does not know the ropes of politics is saying that they are the next Chief Minister


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->