எல்லா மாநிலங்களும் அனுமதி கொடுக்குறாங்க, நாங்களும் கொடுக்குறோம் - அமைச்சர் செந்தில் பாலாஜி புது விளக்கம்!
TASMAC Issue Senthil balaji open talk
"தமிழ்நாட்டில் திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் மற்றும் வீடுகளில் மதுவை இருப்பு வைக்கவும், விருந்தினர்களுக்கு பரிமாறவும் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருக்கிறது" என்று, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு இரு நாட்கள் முன்னதாக வெளியிடப்பட்ட தமிழக அரசின் சிறப்பு அரசிதழ் அறிவிக்கையில், இது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, இனி தமிழகத்தில் திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் போன்ற வணிக பயன்பாட்டு இடங்களில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள், விருந்து நிகழ்ச்சிகளில் சிறப்பு உரிமம் பெற்று, மதுவை இருப்பு வைக்கவும், பரிமாறவும் சிறப்பு உரிமம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் உச்சபட்சமாக மது பிரியர்கள் தங்களின் வீடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கூட மது பரிமாறுவதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.
இந்நிலையில், திருமண மண்டபம் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதிக்கும் வகையில் அரசாணை வெளிவந்த நிலையில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
திருமண மண்டபங்களில் மது அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்படாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி அளித்துள்ளார்.

மேலும் அவரின் அந்த விளக்கத்தில், ஐபிஎல் போட்டி நடக்கும் சேப்பாக்கம் மைதானத்திலும் மது அருந்துவதற்கான அனுமதி வாங்கி உள்ளனர். சர்வதேச நிகழ்வு மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்களில் மது அருந்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
English Summary
TASMAC Issue Senthil balaji open talk