நீட் நல்ல மருத்துவரை உருவாக்குமா.? சொல்றவங்க எல்லாம் பைத்தியக்காரங்க.!! வெளுத்து கட்டிய சீமான்.!! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீட் தேர்வு நல்ல மருத்துவர்களை உருவாக்கும் என கூறும் கருத்து குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் "மருத்துவ படித்தால் தான் தான் சமுதாயத்தில் மரியாதை இருக்கு என மாணவர்கள் மத்தியில் புகுத்தியது யார்.? 

மருத்துவம் என்பதும் ஒரு கல்வி அவ்வளவு தான். நான் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வந்து விட்டால் எனக்கு பாடம் எடுக்கும் பேராசிரியர் யார்?  அவர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவரா.? ஏற்கனவே இருக்கும் பேராசிரியர்கள் தானே அவர்கள்.

அதே போன்று ஏற்கனவே இருக்கும் மருத்துவக் கல்வி பாடத்திட்டம் தானே தற்போதும் உள்ளது. அதே பாடத்திட்டம் அதே பேராசிரியர் இருக்கும்போது எவ்வாறு நீட் தேர்வால் எவ்வாறு தகுதியான மருத்துவர்கள் வந்துவிடுவார்கள். நாளைக்கே மோடிக்கோ, அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கோ முடியவில்லை என்றால் நீட் தேர்வு எழுதி வரும் மருத்துவரிடம் தான் வைத்தியம் பார்ப்பேன் என இருப்பார்களா? இல்லை ஏற்கனவே இருக்கும் மருத்துவர்களிடம் வைத்தியம் பார்ப்பார்களா?

உலகத்தில் மிகப்பெரிய மருத்துவர்களாக இருப்பவர்கள் எல்லாம் பழைய கல்வி முறையில் படித்துச் சென்ற எங்களுடைய ஆட்கள் தான். சும்மா நீட் தேர்வு எழுதினால் தகுதி வந்துவிடும் என சொல்லக்கூடாது.

தேனீர் போட தேயிலை, சக்கரை, பால், தண்ணீர் இதில் சுவை வருமா? இல்லை தேநீரை வடிகட்டும் வடிகட்டியிலிருந்து சுவை வருமா? வடிகட்டி தான் தேனீர் சுவைக்கு காரணம் என சொல்பவன் எப்படிப்பட்ட பைத்தியக்காரனா இருப்பான். இப்படிப்பட்ட பைத்தியக்காரன் தான் நீட் தேர்வினால் நல்ல மருத்துவர்கள் உருவாகிறார்கள் என கூறுவான். வேறு மாநிலத்தில் ஏன் மாணவர்கள் யாரும் இறப்பதில்லை.?" என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman criticizes those who say NEET makes good doctors crazy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->