கமல்-டிடிவி தலைமையில், காங்கிரஸ், விசிக, சரத்குமார், பச்சமுத்து.! திமுகவுக்கு ஆப்பு வைக்க சசிகலா போட்ட மாஸ்டர் பிளான்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணி அதிமுகவில் இருந்து சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியில் இருந்து ஐஜேகே கட்சியும் வெளியேறி கூட்டணி அமைத்த்துள்ளது. இந்த கூட்டணியில் மேலும் ஒரு சில காட்சிகளை தங்களது கூட்டணிக்கு இழுக்கலாம் என்று தெரிகிறது.

அதுவும் திமுக கூட்டணியிலிருந்து நிறைய கட்சிகள் இந்த புதிய கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 190 தொகுதிகளில் போட்டியிட இலக்கை நிர்ணயித்துள்ளது.

இதன் காரணமாக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள 9 கட்சிகளுக்கும் குறைந்த அளவிலேயே தொகுதி பங்கீடு செய்யப்படும் என்று தெரிகிறது. 

ஏற்கனவே திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 18 முதல் 20 என்று தொகுதிகள் ஒதுக்கீடு என்று பேசப்பட்டு இருப்பதால், திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறி கமலஹாசனுடன் இணைந்து புதிய ஒரு கூட்டணியை உருவாக்கலாம் என்று பேச்சுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்று உருவாகிய சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி தலைவர்களில் ஒருவரான சரத்குமார் இன்று கமலஹாசனை நேரில் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும் நல்ல செய்தி வரும் என்றும் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

இதைவிட முக்கியமாக 'ஒத்த கருத்துடையவர்கள்' (கமலஹாசனுக்கு காங்கிரஸ் கட்சி கூட்டணி அழைப்பு விடுக்க பயன்படுத்திய அதே வார்த்தையான "ஒத்த கருத்துடைய") ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணியை உருவாக்க உள்ளோம் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். இதனால்கமல், சரத்குமார், பச்சமுத்து, காங்கிரஸ் கூட்டணி வைக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. 

இதில், சரத்குமார் ஏற்கனவே சசிகலாவை நேரில் சந்தித்து வந்திருப்பதால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் டிடிவி தினகரன் தலைமையில் இந்த காட்சிகளை ஒருங்கிணைக்கவே சரத்குமார் - பச்சமுத்து களமிறங்கியுள்ளதாக தகவல்கள்வாள் வெளியாகியுள்ளான். 

அமமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ், சரத்குமார், பச்சமுத்து உள்ளிட்ட கட்சிகளை இணைந்து மூன்றாவதாக ஒரு கூட்டணியை வலுவாக தமிழகத்தில் ஏற்படுத்தலாம் என்று சசிகலா முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. ஒரு வலுவான கூட்டணியை அமைத்து ஆட்சியை கைப்பற்றினால், புன்னர் அதிமுகவும் நம்மோடு வந்துவிடும் என்று சசிகலா-தினகரன் திட்டமிட்டு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் திமுக கூட்டணியில் தற்போது இடம்பெற்றுள்ள முக்கிய நான்கு கட்சிகள் தனியாக நின்று தேர்தலை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நன்கு கட்சிகளுக்கும் மொத்தமாக தலா 2 தொகுதிகள் தான் திமுக தலைமை ஒதுக்கும் என்பதால், எப்போது வேறு கூட்டணிக்கு தேவலாம் என்று தான் காத்து கொண்டு இருக்கின்றன என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டுவருகிறது. 

எனவே, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சிறிய கட்சிகள் கூட இந்த கூட்டணியில் இணையவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala ttv master plan now


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal