#BREAKING : தலா ஒரு கோடி ரூபாய் பரிசு., அதிரடியாக அறிவித்த முதலமைச்சர்.! 
                                    
                                    
                                   punjab cm announce price 
 
                                 
                               
                                
                                      
                                            ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்திய ஆடவர் ஹாக்கி அணி, இன்று வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் ஆடியது. இதில், ஜெர்மனி அணியை 5 -4 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது. 

1980 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி அசத்தலாக ஆடியது. குறிப்பாக ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு ஜெர்மனி அணிக்கு கிடைத்தது. அதனை கோல் விழாமல் தடுத்து இந்திய வீரர் பதக்கத்தை உறுதி செய்தனர். 

வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியை இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பஞ்சாப் மற்றும் வடமாநிலங்களில் இந்திய ஹாக்கி அணியின் வெற்றியை மேளதாளத்துடன் பட்டாசு கொளுத்தி, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் இந்திய அணிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 8 வீரர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் பரிசு அளித்து, பஞ்சாப் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மன்பிரீத் சிங், ஹர்மன் பிரீத், ரூபிந்தர் பால் சிங், ஹர்திக் சிங், தில் பிரீத் சிங், குர்ஜந்த் சிங், மன்தீப் சிங் உள்ளிட்ட 8 வீரர்களுக்கு, பஞ்சாப் மாநில அரசு தலா ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கி பாராட்டியுள்ளது.