தேர்தலுக்கான ஆயத்தம்! சட்டசபை தொகுதி நிலவரம் எப்படி உள்ளது? - கருத்து கேட்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டசபை தேர்தளுக்காக 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளார்.இதற்காக ஒவ்வொரு தொகுதி நிலவரம் பற்றியும் சர்வே எடுத்து வைத்துள்ளார். இதில் சில தொகுதிகளில் உள்கட்சி பிரச்சனை, இணக்கமான சூழல் கட்சியினரிடமில்லாத நிலை இருப்பதாக தலைமைக்கு தெரியவந்துள்ளது.சட்டசபை தேர்தல்

அதன் அடிப்படையில் தொகுதி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார்.இதில், 'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் நடைபெறும் சந்திப்பு நிகழ்ச்சியில், கடந்த 13-ந்தேதி சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்டார்.

அதைத்தொடர்ந்து இன்று கவுண்டம்பாளையம், பரமக்குடி, பரமத்தி வேலூர் ஆகிய 3 தொகுதி நிர்வாகிகளை அழைத்து கருத்து கேட்டார்.இச்சந்திப்பில் ஒன்றிய செயலாளர், நகரச் செயலாளர் தொகுதி பார்வையாளர், மண்டலப் பொறுப்பாளர் என ஒவ்வொருவரையும் தனித்தனியாக அமர வைத்து உரையாடினார்.

அப்போது அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுடன் இருந்தனர்.மேலும், சட்டசபை தொகுதி நிலவரம் எப்படி உள்ளது? ஏதும் கருத்து வேறுபாடுகள் உள்ளதா? என்பது போன்று பல விவரங்களை கேட்டறிந்தார். இந்தத் தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்பதையும் அறிந்து கொண்டார்.

மேலும், நிர்வாகிகளிடம் சகஜமாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவிக்கும்,கருத்துக்களை கவனமாக கேட்டறிந்தார்.இதில்,மொத்தம் 74 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதைப் பற்றிய விமர்சனங்கள் தற்போது இணையத்தில் அதிகளவில் பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Preparations for the elections How is situation in assembly constituencies Asked for opinion from Chief Minister MK Stalin


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->