பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும்! தமிழிசை வலியுறுத்தல்!
Pollachi case Tamilisai
பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி நந்தினி தேவி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தண்டனை விவரம் இன்று பிற்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும்.
இந்நிலையில், இந்த வழக்கை தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அதில்,
“மனிதாபிமானம் அற்ற இவ்வகை குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்,
சமூகத்திற்கு பாடம் அளிக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைய வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் தீர்ப்பு, நீண்ட காலமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.