மின் பற்றாக்குறை போக்க நடவடிக்கை தேவை..MLA வைத்தியநாதன் மின்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தல்!
Action is needed to address the electricity shortage MLA Vaithiyanathan emphasizes to the electricity department officials
குறிஞ்சி நகர் பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்துதல்,தொகுதி முழுவதும் அதிக இடங்களில் தெரு மின்விளக்குகள் எரியாதது குறித்தும் மின்சாரத் துறை சம்பந்தப்பட்ட குறைகளுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இலாசுப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மின்சாரத் துறை சம்பந்தப்பட்ட குறைகளுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று 13.05.2025 (செவ்வாய்க் கிழமை) மின்துறை தலைமை அலுவலகத்தில் இலாசுப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. மு. வைத்தியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மின்துறை கண்காணிப்பு பொறியாளர்கள் திரு. ராஜேஷ் சன்யால், திரு. கணியமுதன், செயற்பொறியாளர் ஶ்ரீதர், உதவிப்பொறியாளர் திரு. பாண்டியன், இளநிலைப் பொறியாளர் திரு. செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இலாசுப்பேட்டை துணைமின் நிலையம் திறப்பு தேதி பெத்துச்செட்டிப்பேட்டை பகுதியில் நிலவும் மின் பற்றாக்குறை அதற்காஹ புதிய மின் மாற்றிகள் அமைத்தல் மற்றும் ஜீவானந்தபுரம், குறிஞ்சி நகர் பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்துதல்,தொகுதி முழுவதும் அதிக இடங்களில் தெரு மின்விளக்குகள் எரியாதது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
English Summary
Action is needed to address the electricity shortage MLA Vaithiyanathan emphasizes to the electricity department officials