தஞ்சையில் அனுமதியின்றி திமுகவினர் செய்த வேலை.! காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு, மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கி உள்ளன. கடந்த 19 ஆம் தேதிமுதல் தமிழகத்தில் அரசியல் காட்சிகள் தேர்தல் பிரச்சாரம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக தஞ்சாவூர் மாவட்ட தி.மு.க. ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் உள்ளிட்ட தி.மு.க. வினர் 100 பேர் மீது, பாபநாசம் போலீசார் விஜயா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருப்பாலைத்துறையில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. திமுக தரப்பில் இந்த கூட்டத்துக்கு எந்த அனுமதியும் பெறாமல் நடத்தப்பட்டதாக கூறி தஞ்சை மாவட்ட தி.மு.க. ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் உள்ளிட்ட 100 பேர் மீது பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police case file Thanjai dmk members


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->