நேற்று மருத்துவர் இராமதாஸ் கண்டனம் தெரிவித்த நிலையில், தடையை நீக்கி இன்று உத்தரவிட்ட பல்கலைக்கழகம்.! - Seithipunal
Seithipunal


உயர்கல்வி நிலையங்கள் தான் அரசியல் நாற்றங்கால்கள்: அரசியல் செயல்பாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை பெரியார் பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்திய நிலையில், இன்று அரசியல் செயல்பாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை பெரியார் பல்கலைக்கழகம் திரும்பப் பெற்றுள்ளது.

இதுகுறித்து நேற்று மருத்துவர் இராமதாஸ் விடுத்த செய்திக்குறிப்பில், "சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் அரசியல் சார்ந்த செயல்பாடுகளுக்கு அதன் பதிவாளர் தடை விதிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமையை பறிக்கும் செயலாகும்!

உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் அரசியலுக்கு முக்கியத்துவம் உண்டு.  தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தான் அரசியலை வளர்த்தன; அவை தான் அரசியல் நாற்றங்கால்களாக  திகழ்ந்தன.  அவற்றை சிதைக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது!

தமிழக அரசின் சுற்றறிக்கைப்படி தான் இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக துணைவேந்தர் கூறியிருக்கிறார். இந்தத் தடைக்கு யார் காரணமாக இருந்தாலும் அது தவறு தான்.  தடை விதிக்க  தூண்டியதா? என்பது  தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்!

அரசியலும் ஓர் அறிவு தான்.  அரசியல் செயல்பாடுகளால் பல்கலைக்கழகம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது; மாறாக பண்படும். எனவே,  பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் அரசியல் செயல்பாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும்" என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் அரசியல் சார்ந்த செயல்பாடுகளுக்கு அதன் பதிவாளர் தடையை நீக்கி பெரியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Periyar University political issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->