ஜெயில் - பெயில்! குடும்பக் கட்சி! - விருதுநகரில் ஜேபி நட்டா தாக்கு! - Seithipunal
Seithipunal


மதுரை, திருமங்கலம் பிரசாரக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பிரசாரம் அனல் பறக்க நடந்து கொண்டிருக்கிறது. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா சரத்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

பிரச்சாரத்தின்போது ஜே.பி.நட்டா பேசுகையில், "பாஜகவின் 10 ஆண்டு ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு நாடு வந்ததற்கு, பிரதமரின் தலைமை பண்பே காரணம்.

இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒன்று பெயலில் உள்ளனர். அல்லது ஜெயிலில் உள்ளனர். இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை அனைத்து மாநிலங்களிலும் குடும்பக் கட்சியாக தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parliament Election Campaign BJP JP Nadda 


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->