அமித் ஷா செயலளால் வருத்தப்பட்ட ஓபிஎஸ்! பரபரப்பு பேட்டி!
OPS BJP ADMK Amitshah
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வருகைபேரில் தம்மை அழைக்காதது குறித்து வருத்தம் தெரிவித்தார்.
அவரின் அந்த பேட்டியில், “நாங்கள் இன்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) தான் உள்ளோம். எங்கள் நிலைபாடு தெளிவாக கூறப்பட்டுவிட்டது. யாரால் ஏற்கப்பட்டாலும் ஏற்கப்படாவிட்டாலும் அது மாறாது.
மாவட்டம் வாரியாக ஆய்வு செய்து, விரைவில் தேர்தல் கூட்டணிக்கான முடிவுகளை அறிவிக்க உள்ளோம். இதுவரை எந்தவொரு கட்சியுடனும் மறைமுகமாக பேசவில்லை,” என்றார் ஓபிஎஸ்.
மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்குக் கிடைத்தது தற்காலிகமெனவும், தம்மால் அல்லாமல் அந்த சின்னம் நிலைத்ததாக நினைத்தால் தவறு எனவும் குறிப்பிட்டார்.
மேலும், தவெக தலைவர் விஜய் தன்னிச்சையான பாதையில் நன்றாக முன்னேறி வருகிறார் எனவும் புகழ்ந்தார்.