ஈபிஎஸ்-க்கு அடுத்த ஷாக்! உச்சநீதிமன்றத்திற்கு ஓடிய ஓபிஎஸ்!
OPS appeal in Supreme Court in AIADMK general committee resolution case
அதிமுக பொது குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.பி பிரபாகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி மற்றும் இரு நீதிபதிகள் அமர்வு அதிமுக பொதுக்குழு தொடர்பான அனைத்து வழக்குகளையும் கடந்த மாதம் 25ஆம் தேதி தள்ளுபடி செய்தது. அந்த தீர்ப்பில் அதிமுக பொது குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது எனவும், அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் அது கட்சியின் செயல்பாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே தங்கள் கருத்துகேட்காமல் எந்த உத்தரவு பிரிக்கக் கூடாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலை தற்போது ஓபிஎஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கூடிய விரைவில் உச்ச நீதிமன்றத்தால் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
OPS appeal in Supreme Court in AIADMK general committee resolution case