அமித்ஷாவுடனான சந்திப்பு - ஓரங்கட்டப்பட்டாரா ஓபிஎஸ்?!
OPS Amit shah meet issue ADMK EPS
ஓபிஎஸ்-யை தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க மறுப்பு தெரிவித்த நிலையில், ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டாரா என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி அளித்துள்ள பேட்டியின் விவரம் பின்வருமாறு,
புகழேந்தி : பிரதமர் அவர்கள் நேற்று வருகின்றபோதும், அவர் புறப்படும் போதும் ஓபிஎஸ் அவர்கள் கலந்து கொண்டார் என்பதை நாம் பார்த்தோம். மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்களையும் மரியாதை நிமித்தமாக ஓபிஎஸ் சந்தித்ததை நாம் அறிந்தது தான். ஓ பன்னீர்செல்வத்தை புறக்கணித்துவிட்டு அமித்ஷா புறப்படவில்லை.

செய்தியாளர் : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பார்ப்பதற்கு டெல்லி தலைவர்கள் தவம் கிடந்தனர். ஆனால் இப்போது நீங்கள் பொதுவெளியில் கூட்டுதொடு கூட்டமாக வரிசையில் நின்று பூங்கோத்துக் கொடுத்து வரவேற்பது தான் முறையா ஆளுமையா?
புகழேந்தி : இதற்குக் காரணம் எடப்பாடி பழனிசாமி தான். டெல்லி தலைவர்களை பொருத்தவரை எந்த காலத்திலும் எடப்பாடி பழனிசாமியை நம்ப மாட்டார்கள். அவர் ஒரு நம்பிக்கை துரோகம் செய்பவர்.
டெல்லி தலைவர்களை பொருத்தவரை அண்ணன் ஓபிஎஸ்-க்கு தான் மதிப்பளிப்பார்கள் என்றார்.
English Summary
OPS Amit shah meet issue ADMK EPS