கால் பார்த்தால் தான் வழி தெரியும்! - முதலமைச்சர் ஸ்டாலினின் 'சூரியன்' விமர்சனத்திற்கு இ.பி.எஸ். 'நச்' பதிலடி...! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழாவில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. அரசை மிகக்கடுமையாகச் சாடினார்.

மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளைச் சட்டமன்றத்தில் எழுப்பினால், ஆளுங்கட்சியிடமிருந்து முறையான பதில்கள் வருவதில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். "அரசியலை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முதலமைச்சர் பழகிக்கொள்ள வேண்டும்; எப்போதாவது கால்களைப் பார்த்தால் தான் சரியான பாதையில் பயணிக்க முடியும்" என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் தி.மு.க.வின் ஆட்சிக் காலத்தில் சாமானிய மக்களுக்கு எவ்விதப் பலனும் கிடைக்கவில்லை என்று விமர்சித்த அவர், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி பன்மடங்கு உயர்ந்திருப்பதையும்,  மக்கள் கடனாளிகளாக மாற்றப்பட்டிருப்பதையுமே இந்த ஆட்சியின் சாதனையாகக் குறிப்பிட்டார்.

அரசின் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் அவலங்கள் குறித்துத் தாங்கள் கேள்வி எழுப்பினால், அதற்குப் பதில் கூற வக்கற்ற தி.மு.க. அரசு, தன் மீது அவதூறுகளை மட்டுமே பரப்பி வருவதாகச் சீறினார்.

அண்மையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "எப்போதும் கீழே பார்த்து நடப்பவர்களுக்கு மேலே இருக்கும் சூரியன் எப்படித் தெரியும்?" என்று எடப்பாடி பழனிசாமியை விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, "தரை பார்த்து நடந்தால்தான் தடம் மாறாமல் பயணிக்க முடியும்" எனும் தொனியில் ஓமலூர் மேடையில் இ.பி.எஸ். தனது வாதத்தை முன்வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Only by looking at leg path revealed EPS delivers sharp retort Chief Minister Stalin Sun criticism


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->