ஆளுநருக்கு அந்த அதிகாரம் உள்ளது - திமுக எம்.பி.,க்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.! - Seithipunal
Seithipunal


நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான தமிழக அரசின் சட்டத்தை ஆளுனர் திருப்பி அனுப்பி உள்ளார். நீட் விலக்கு சட்டம் தமிழ்நாட்டிலுள்ள கிராமப்புற, ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்று ஆளுனர் கருத்து தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்க கோரியும், தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும், ஆளுநரை திரும்ப பெற கோரியும், தமிழ்நாடு எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம் எழுப்பினர். 

திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசுகையில், '5 மாதங்கள் காலதாமதம் செய்து, நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்' என்று தெரிவித்தார். 

பின்னர், நீட் விலக்கு மசோதாவை திரும்ப அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூ. உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மக்களவையில் அப்போது திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவுக்கு பதில் அளித்து பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், 'ஒரு மசோதாவை திரும்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது' என்று தெரிவித்தார். 

இதற்கிடையே சற்றுமுன் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEET TRBaalu LokSabha RNRavi NarendraSinghTomar 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->