இனி ஆல்-பாஸ் இல்லையா? கொந்தளிக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ்!
Minister Anbil Mahesh Poyyamozhi condemn Central govt CBSE
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு இனி 30 சதவீதம் மதிப்பெண் பெற முடியாவிட்டால் தோல்வி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது இருக்கும் "அனைவரும் தேர்ச்சி" என்ற நடைமுறையை சி.பி.எஸ்.இ. எதிர்வரும் கல்வியாண்டு முதல் மாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ.யின் இந்த புதிய விதிமுறையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “தி.மு.க. அரசு கல்வி சமத்துவத்தை முக்கியமாக கருதி செயல்படுகிறது. தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தது இதே காரணத்தால் தான். மாணவர்களை தோல்வியாளர்களாக வகைப்படுத்துவதால் கல்வி இடைநிற்றல் அதிகரிக்கும்,” என்றார்.
5 மற்றும் 8-ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களை மீண்டும் அதே வகுப்பில் படிக்க வைத்தால் அவர்கள் மீது மன அழுத்தம் ஏற்படும் என்றும், இது கல்வியிலிருந்து விலக வைக்கும் என்றும் அவர் எச்சரித்தார். தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக பெற்றோர்களும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
English Summary
Minister Anbil Mahesh Poyyamozhi condemn Central govt CBSE