பஹல்காம் தாக்குதல் - தமிழக பாஜக சார்பில் இன்று போராட்டம்.!!
tamilnadu bjp protest against bahalkam attack
கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த பயங்கர தாக்குதல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து தமிழக பா.ஜ.க. சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளதாவது:-

"காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற மக்களை மதத்தின் பெயரால் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் படுகொலை செய்த கொடூரம் உலக நாடுகளையே உலுக்கியுள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தான், வங்கசேத்தைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளைத் தொடர்ந்து அடையாளம் கண்டு வெளியேற்றுவதிலும் தமிழக அரசு மும்முரமாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ராணுவத்தின் மீதும் தேச பாதுகாப்பின் மீதும் வதந்திகளைக் கிளப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பா.ஜ.க. சார்பில் திங்கட்கிழமை கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
English Summary
tamilnadu bjp protest against bahalkam attack