தங்கப் புதையல் எடுத்துக் கொடுப்பதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி.. தம்பதியை ஏமாற்றிய 10 பேர் கைது!
Man duped of Rs 8 lakh on the pretext of taking gold treasure Couple arrested for cheating 10 people
ஓசூர் அருகே புதையல் எடுத்துக் கொடுப்பதாக கூறி தம்பதியை ஏமாற்றி ரூ.8 லட்சம் பணம் பறித்த 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.
ஓசூர் அருகே சாந்தபுரம் செந்தமிழ் நகரைச் சேர்ந்த பால் வியாபாரம் செய்துவரும் தம்பதி ராதம்மா-குள்ளப்பா. இந்த நிலையில் இந்த தம்பதியிடம் பெங்களூருவைச் சேர்ந்த லட்சுமிகாந்த் என்ற நபர் உங்கள் வீட்டுக்கு அருகில் தங்கப் புதையல் இருக்கிறது ஆசை காட்டியுள்ளார்.
இதனை நம்பிய அந்த தம்பதி புதையலை எடுக்க ஒப்புக்கொண்டனர்.இதையடுத்து இரவில் குழி தோண்டிய போது அந்த கும்பல் தம்பதியின் கவனத்தை திசை திருப்பி, செயற்கையாகப் புதைக்கப்பட்ட 2 தங்கக் காசுகளை எடுத்துக் காண்பித்து நம்ப வைத்துள்ளனர்.அதுமட்டுமல்லாமல் இன்னும் ஆழத்தில் பெரிய புதையல் இருப்பதாக ஆசை வார்த்தை கூறி அதை எடுக்க ரூ.8 லட்சம் பெற்றுள்ளனர்.
பின்னர் மற்றொரு பானையை எடுத்துக் கொடுத்து, தினமும் பூஜை செய்து வர வேண்டும் என்றும், பூஜை முடிவதற்குள் பானையை திறந்து பார்த்தால் ரத்த வாந்தி எடுத்து சாவீர்கள் என்றும் வடிவேல் வசனம் எல்லாம் பேசி அந்த தம்பதியை நம்பவைத்துள்ளனர்.அதை நம்பி அவர்களும் தினமும் பூஜை செய்து வந்தநிலையில் அந்த கும்பல் மேலும் பணம் தேவை என்று கேட்டுள்ளனர்.
இந்த நிலையில் ராதம்மாவின் மகன் பானையை திறந்து பார்த்த போதுதான் அதில் ஒன்றும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், போலீசில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து புகாரின் அடிப்படையில் தம்பதியை ஏமாற்றி பணம் பறித்த 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.
English Summary
Man duped of Rs 8 lakh on the pretext of taking gold treasure Couple arrested for cheating 10 people