ஜி.எஸ்.டி. குறைப்பு – விலை குறையும் பொருட்கள் எவை?
GST reduction Which items will have a price decrease?
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எஸ்.யு.வி., சொகுசு கார்கள், புகையிலைப் பொருட்களுக்கு 40% வரி விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
கடந்த மாதம் கூடிய மந்திரிகள் குழு, ஜி.எஸ்.டி. வரிஅடுக்கு குறைப்புக்கு ஒப்புதல் தெரிவித்தது. தனது பரிந்துரைகளை ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்றும் , நாளையும் நடக்கிறது. அதில், அனைத்து மாநிலங்களின் நிதி மந்திரிகளும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.எஸ்.டி.யை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைப்பது பற்றியும், வரிகுறைப்பு பற்றியும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
ரூ.40 லட்சம் வரை மதிப்புடைய மின்சார வாகனங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்க வேண்டும் என்று மந்திரிகள் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க விரும்பும் மத்திய அரசு, மின்சார வாகனங்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.தான் விதிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தும் என்று தெரிகிறது.
தற்போதைய 5%, 12%, 18%, 28% என்ற 4 அடுக்குகளுக்குப் பதிலாக 5% மற்றும் 18% என்ற 2 அடுக்குகள் மட்டுமே இருக்கும் வகையில் ஆலோசனை நடக்கிறது.
12% ஜி.எஸ்.டி.யில் உள்ள நெய், குடிநீர், தின்பண்டங்கள், சில ஆடைகள், மருந்துகள், மருத்துவ கருவிகள், பென்சில், சைக்கிள், குடை போன்றவை 5%க்கு மாற்றப்படலாம். 28% ஜி.எஸ்.டி.யில் உள்ள டெலிவிஷன், பிரிஜ், வாஷிங் மெஷின் போன்றவை 18%க்கு குறைக்கப்படலாம்.
மின்சார வாகனங்களுக்கு 5% ஜி.எஸ்.டி. விதிக்க மத்திய அரசு வலியுறுத்துகிறது. ஆனால் எஸ்.யு.வி., சொகுசு கார்கள், புகையிலைப் பொருட்களுக்கு 40% வரி விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
English Summary
GST reduction Which items will have a price decrease?