தேர்தல் யுக்திகள்! திடீரென தமிழக பா.ஜ.க. குழுவை டெல்லிக்கு அழைத்து அமித்ஷா அதிரடி ஆலோசனை..!
Election tactics Suddenly Amit Shah calls Tamil Nadu BJP team to Delhi and gives strategic advice
வருகிற 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. பல்வேறு வியூகங்களை தீவிரமாக வகுத்துள்ளது.இதில் மத்திய அமைச்சர் அமித்ஷா நேரடியாக சென்னை வந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து தமிழக முழுவதும் பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி, 7 மண்டலங்களில் மாநாடுகள் நடத்தும் திட்டத்தில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது. அதே சமயத்தில், எதிர்க்கட்சிகள் – தி.மு.க., காங்கிரஸ் – வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் மற்றும் பிரசாரங்களுடன் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழலில், தமிழக பா.ஜ.க. உயர்மட்ட குழுவை அவசரமாக டெல்லிக்கு அழைத்து இன்று காலை 6 மணிக்கு அமித்ஷா முக்கிய ஆலோசனையை நடத்தியுள்ளார்.
இதில் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் தமிழிசை, அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து, கூட்டணியை வலுப்படுத்தும், வாக்குத் திருட்டு முறைகேடுகளை முறியடிக்கும், எதிர்க்கட்சிகளின் வதந்திகளை தடுக்கும்வகை திட்டங்களை விவாதித்துள்ளனர்.
மேலும், தமிழக பா.ஜ.க.-வினரிடையே உள்ள ஒருங்கிணைப்பு சிக்கலையும் தீர்க்கவும், கோஷ்டி பூசல் பிரச்சனை தொடர்பிலும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு சூடு பிடித்துள்ளது.
English Summary
Election tactics Suddenly Amit Shah calls Tamil Nadu BJP team to Delhi and gives strategic advice