உக்ரைன்-ரஷ்யா போர் சூடு பிடிக்க, ஐரோப்பா பதட்டம்…!- புதின் விளக்கம் வைரல் - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் 3 -வது ஆண்டை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய அதிபர் 'விளாடிமிர் புதின்'  திடீரென சீனாவுக்கு பயணம் செய்தது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சமயத்தியல், ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என பிரான்ஸ், ஜெர்மனி வெளியிட்ட எச்சரிக்கை ஐரோப்பா முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதில் வருகிற 2026 மார்ச் மாதத்திற்குள் கடுமையான நெருக்கடி ஏற்படலாம் என்று தெரிவித்த பிரான்ஸ் அரசு, நாடு முழுவதும் இருக்கும் மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில்,"போர்க்காலத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் காயமடைந்தால் சிகிச்சைக்குத் தயாராக இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், ரஷ்யாவின் இராணுவப் பயிற்சிகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதாக ஜெர்மனியும் அறிவித்துள்ளது.இதன் காரணமாக ஐரோப்பாவில் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில், புதின் கடுமையாக மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது,"ரஷ்யா ஒருநாள் ஐரோப்பிய நாடுகளை தாக்கும் என்கிற பரப்புரைகள் அனைத்தும் பொய்யானவை. பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை கட்டுக்கதைகளை உருவாக்கி வருகின்றன.

உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதை நாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை" என்று விளாடிமிர் புதின் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ukraine Russia war heats up Europe is nervous Putins explanation goes viral


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->