கழுதைகள் பற்றி யாராவது கவலைப்பட்டாங்களா?” – தெருநாய் விவகாரத்தில் கமல்ஹாசன் கருத்து - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து, அதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்த பிரச்சனை சமூக விவகாரமாக மாறி, தெருநாய்களை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போர் என இரு தரப்பினரும் வாதிட, இணையத்தில் விவாதம் சூடுபிடித்துள்ளது.

இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் மற்றும் எம்.பி. 'கமல்ஹாசன்' அவர்கள் தெருநாய்கள் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

கமல்ஹாசன்:

அவர் தெரிவித்ததாவது,"தீர்வு மிகவும் சிம்பிள். உலக சரித்திரமும், சமூக சுகாதாரமும் தெரிந்தவர்களிடம் கேளுங்கள். கழுதைகள் எங்கும் காணப்படுவதில்லை.

அது நமக்காக எவ்வளவு சுமையைக் சுமந்தது! இப்போது அதை காப்பாற்ற வேண்டும் என்று யாரும் பேசுகிறார்களா? எல்லா உயிர்களையும் எவ்வளவு முடியுமோ அதுவரை காப்பாற்ற வேண்டும், அதுதான் என் கருத்து” என்று தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் ரூ.3000 கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டதை பா.ஜ.க விமர்சித்தது குறித்து, “ஒருவர் நல்லது செய்யும்போது அவர் எந்தக் கட்சியை சேர்ந்தவர் என்று நான் பார்த்ததில்லை.

நாட்டுக்கு நல்லது நடந்தால், எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாளை அவர்கள் நல்லது செய்தாலும் அதையே பாராட்டுவோம்” இன்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Did anyone worry about donkeys Kamal Haasan comment stray dog ​​issue


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->