அபாயம்! காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் உடனே மருத்துவமனைக்கு செல்லுங்கள்! – சுகாதாரத்துறை எச்சரிக்கை..!
Go hospital immediately if you notice any symptoms of fever Health Department warns
கடந்த சில தினங்களாக, தமிழகம் முழுவதும் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது.

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் சிகிச்சை பெறுகிறார்கள்.இதில் காய்ச்சலுடன் உடல் சோர்வு, வறட்டு இருமல், தொண்டை வலி, சளி போன்ற அறிகுறிகளும் இருப்பதாக தெரிகிறது. இதற்கு பெரும்பாலும் இன்புளூயன்சா வைரஸ்தான் காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் இருமல், தும்மல் மூலமே அருகிலிருப்போருக்கும் எளிதில் பரவுகிறது.இதன் காரணமாக வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், உடன் நோய்கள் உள்ளவர்கள் பொதுவிடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிவது அவசியம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பரவி வருவது புதிய வைரஸ் அல்ல, சாதாரண இன்புளூயன்சா காய்ச்சல்தான் எனவும், 50% நோயாளிகளுக்கு அதே பாதிப்பே இருப்பதாகவும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
அதேசமயம், ஆண்டின் இறுதி 3 மாதங்களில் டெங்கு பாதிப்பு இரட்டிப்பாக அதிகரிப்பது வழக்கம்தான் என்றும், வீடு சுற்றி தண்ணீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது."காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்" என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
English Summary
Go hospital immediately if you notice any symptoms of fever Health Department warns