மிகப்பெரிய போராட்டம் நடக்கும்..முன்னாள் MLA அரசுக்கு எச்சரிக்கை!
There will be a big fight Warning to the ex-MLA
நெல்லித்தோப்பு தொகுதி மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக உரிமை மீட்பு குழு ஓம்சக்தி சேகர் அரசுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக உரிமை மீட்பு குழு ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:ஒரு மாநிலத்தின் வளர்ச்சி அதில் உள்ள அடிப்படை கட்டமைப்புகள் சிறப்பாக அமைந்திருக்கின்றன வா என்பதை கொண்டு மதிப்பீடு செய்யப்படுகிறது. அடிப்படை கட்டமைப்புகள் சிறப்பாக அமையப்பெற்றால்மட்டுமே முதலீடுகள் ஒரு மாநிலத்தை வந்து சேரும்.
புதுச்சேரி மாநிலத்தை பொருத்தவரையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பின்னர் பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றனர். இருப்பினும் ஒரு சில பணிகள் காலதாமதத்தால் மக்கள் இடையே அதிருப்தி நிலவுகிறது.
குறிப்பாக புதுச்சேரி உள்ளாட்சித் துறை சார்பில் அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முக்கியமான சாலைகள் சம்பந்தப்பட்ட நிறுவனம் மூலம் தினந்தோறும் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது என்ன காரணத்தினாலோ தெருக்களை சுத்தம் செய்யும் பணியை சரிவர செய்வதில்லை. குறிப்பாக நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லெனின் வீதி,திருவள்ளுவர் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகள் சுத்தம் செய்யப்படாமல் காணப்படுகின்றன.
பொதுமக்களிடம் குப்பை வரி,வீட்டு வரி,மற்ற அத்தியாவசிய தேவைகளுக்கு வரிகளை நகராட்சி நிர்வாகம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு உரிய தேவைகளை செய்யாமல் இருப்பது ஏற்புடையது அல்ல.
அதேபோன்று நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதியில் பொது பணித்துறை சார்பில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவந்த நிலையில் இருந்தாலும், பாதாள சாக்கடை திட்டம் இதுவரை செயல்படுத்தப்படாதது வேதனை அளிக்கிறது.
காமராஜர் சாலையில் தற்போது நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் தற்போது வரை நிறைவடையாமல் உள்ளது. இதனை சரி செய்ய அரசு உயிர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போன்று நெல்லி தோப்பு சட்டமன்ற தொகுதியில் பழுதடைந்த குடிநீர் குழாய்களை மாற்ற வேண்டும் என பல மாதங்களாக கோரிக்கை வைத்து வருகிறோம் அதனையும் உடனடியாக சரி செய்து சுத்தமான குடிநீர் நெல்லிதோப்பு தொகுதி மக்களுக்கு கிடைக்க அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவை அனைத்தையும் கோரிக்கையாக நாங்கள் தற்போது கூறியுள்ளோம்.
சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் இந்த பிரச்சனைகளை உடனடியாக சரி செய்யாவிட்டால் நெல்லித்தோப்பு தொகுதி மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் சம்பந்தப்பட்ட துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த தயங்க மாட்டோம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதிமுக உரிமை மீட்பு குழு ஓம்சக்தி சேகர் அரசுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
English Summary
There will be a big fight Warning to the ex-MLA