கடும் கண்டனம்! கட்சி ஆரம்பித்த காரணத்திற்காகவே வசை பாடுவது ஏற்கத்தக்கதா? - அன்பில் மகேஷ் - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் நடந்து முடிந்த தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் விஜய், தி.மு.க.வைத்து விமர்சனங்களை அள்ளித்தெளித்திருந்தார்.

அதிலும் குறிப்பாக முதலமைச்சரை 'ஸ்டாலின் அங்கிள்' என்று விஜய் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதைத் தொடர்ந்து,மாநாட்டில் விமர்சித்த  விஜய்க்கு திமுக அமைச்சர் 'அன்பில் மகேஷ்' கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது," கலைஞர், மு.க.ஸ்டாலின், உதயநிதியுடன் விஜய் குடும்பம் நல்ல உறவுமுறையில் இருந்தவர்கள்தான்.இதில் 50 ஆண்டு பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான முதல்வரை இப்போ வந்த விஜய் விமர்சித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.

த.வெ.க. தொண்டர்கள் மெச்சூரிட்டி ஆன நிலையில், விஜய் விசிலடிச்சான் குஞ்சுகளாகி விட்டாரா? கட்சி ஆரம்பித்த காரணத்திற்காகவே வசைபாடுவது ஏற்கத்தக்கதா என விஜய் சிந்திக்க வேண்டும் " என்று தெரிவித்தார்.

விஜய் விமர்சனத்துக்கு திமுக தொண்டர்கள் பலரும் கடும் கோபத்தில் தான் இருக்கிறார்கள்.மேலும் பலர் ஒரு ஆட்சியில் இருக்கும் முதலவரை எப்படி ஒருவர் இப்படி சொல்ல இயலும் என்று கேட்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Strong condemnation Is it acceptable chant slogans just reason party was started Anbil Mahesh


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->