Ola வை Rapido முந்தியதற்கு காரணம் இதுதான்...! uber ceo
reason why Rapido overtook Ola Uber ceo
கார், டேக்ஸி உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகிற அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஊபர் (UBER) தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆக டாரா கோஸ்ரோஷாஹி இருக்கிறார்.இதனிடையே,இந்தியாவில் அந்நிறுவனத்தின் போட்டியாளராக இருந்த ஓலா (OLA) நிறுவனத்தை தற்போது ராபிடோ (Rapido) நிறுவனம் முந்தியுள்ளது.

இதுதான் தற்போது எங்களின் போட்டியாளராக மாறியுள்ளதாக பேட்டி ஒன்றில் uber ceo தெரிவித்துள்ளார்.அண்மைக்காலமாக ஓலா நிறுவனம் அதன் ஓட்டுநர் கமிஷன், மின்சார ஸ்கூட்டர் மற்றும் சேவை தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவது தான் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதில் மறுபுறம், 2015-ல் துவங்கப்பட்ட ராபிடோ நிறுவனம், முதலில் இரு சக்கர வாகன டாக்சி சேவையை அறிமுகப்படுத்தி சந்தையில் விரைவாக வலுவான இடத்தைப் பிடித்த பிறகே ஆட்டோ மற்றும் கார் சேவைகளை தொடங்கியது.
மேலும் குறைந்த கமிஷன் கட்டணமே ராபிடோவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. uber மற்றும் ola 18-22% கமிஷன் வசூலிக்கும் நிலையில், ராபிடோ 0-5% மட்டுமே வசூலிக்கிறது. மேலும், ராபிடோ தளத்தில் மாதம் 20 லட்சம் ஓட்டுநர்கள் சேவையாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.
English Summary
reason why Rapido overtook Ola Uber ceo