தேர்தல் களத்தில் விஜய் அதிரடி: தென் மாவட்டங்களை கைப்பற்ற அடுத்த கட்ட திட்டம்...! - Seithipunal
Seithipunal


விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து தனது அரசியல் பிரச்சாரத்தில் முழு வேகத்தில் இயக்கி வருகிறார்.மேலும், மாநிலம் முழுவதும் தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சித் தலைவர் விஜய் தனது முதல் கட்ட பிரசாரப் பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்கி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கரூர், ஈரோடு, சேலம், வேலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

அவர் சென்ற இடமெங்கும் மக்கள் வெள்ளம் பெருக்கெடுத்து, சாலைகள் முழுவதும் உற்சாகக் குரல்கள் ஒலித்தன.இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக தென் மாவட்டங்களை மையமாகக் கொண்டு பிரசாரத்தை விரிவுபடுத்த கட்சி திட்டமிட்டுள்ளது.

விஜயின் அறிவுறுத்தலின்படி பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களைத் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அரசியல் ரீதியாக தென் மாவட்டங்கள் எப்போதும் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வந்துள்ளன. அதனால் அரசியல் கட்சிகள் அனைத்தும் இப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன.

இந்த சூழலில், மக்களின் ஆதரவை வலுப்படுத்த விஜய் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் விரைவில் விரிவான சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijays action election arena next phase plan capture southern districts


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->