ஆந்திராவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடால் பங்க்குகள் மூடல்; வாகன ஓட்டிகள் கடும் அவதி..!
Petrol and Diesel Shortage Forces Closure of Fuel Stations in Andhra
ஈரான் போர் காரணமாக ஹர்மூஸ் நீரிணையை ஈரான் முடக்கிய நிலையில், கப்பல் நிறுத்தம் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் நிலைமை படிப்படியாக மாறி வரும் இந்த சூழலில், ஆந்திராவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் கிடைக்காத காரணமாக பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக திருப்பதி, கடப்பா, விஜயவாடா, விசாகப்பட்டினம், கர்னூல் உள்ளிட்ட பல மாவட்டத்தில் கையிருப்பு இல்லாததால் பல பெட்ரோல் பங்க் மூடப்பட்டுள்ளன. சில பெட்ரோல் பங்குகள் மட்டுமே இயங்குவதால் அங்கு கார், இருசக்கர வாகன ஓட்டிகள் படையெடுப்பதால் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
தற்போது கிராமப்புறங்களில் நெல் அறுவடை நடைபெற்று வருகின்ற நிலையில், டீசல் தட்டுப்பாடு காரணமாக அறுவடை இயந்திரங்களை வரவழைப்பதில் சிரமப்படுகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் அறுவடை செய்ய முடியாமல் உள்ளது. இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறுகையில், 'தினமும் எரிபொருள் வழங்கும் 03 எண்ணெய் நிறுவனங்கள் 04 அல்லது 05 நாட்களுக்கு ஒருமுறைதான் டேங்கர்களை அனுப்புகிறது. இதனால் போதிய அளவில் பெட்ரோல், டீசல் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படுத்துகிறது'. என்று கூறியுள்ளனர்.
English Summary
Petrol and Diesel Shortage Forces Closure of Fuel Stations in Andhra