தரம் இல்லாத கேன் குடிநீர் விநியோகம் செய்தால் அபராதம்; உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை..!
The Food Safety Department has warned that fines will be imposed for the distribution of substandard canned drinking water
நாடு முழுவது குடிநீர் விநியோகத்திற்கு அதிகமாக கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை புழக்கத்தில் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் கேன் குடிநீர் விநியோகம் அமோகமாகவுள்ளது. இந்நிலையில் இனிவரும் காலங்களில் தரம் இல்லாத கேன் குடிநீர் விற்றால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என குடிநீர் விற்பனை நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், குடிநீர் கேன்களில் நிறுவனத்தின் பெயர், காலாவதி தேதி குறிப்பிட வேண்டும் எனவும், குடிநீர் கேன்களை 30 முறைக்கு மேல் மறுசுழற்சி செய்யக்கூடாது எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அத்துடன், பலமுறை பயன்படுத்திய பழைய கேன்களில் தண்ணீரை விற்பனை செய்யக்கூடாது எனவும், குடிநீர் கேன்களை நேரடியாக வெயிலில் படும்படி வைக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான விதிகளை மீறும் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும், கேன் குடிநீரின் தரத்தை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், உணவுப் பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காத குடிநீர் ஆலைகள் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு தரமில்லாத கேன் வாட்டர் விற்பனை செய்யப்பட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
The Food Safety Department has warned that fines will be imposed for the distribution of substandard canned drinking water