ராமநாதபுரம் மாவட்டம் கடற்பரப்பில் அதிரடி ரோந்து...! இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் 2 பேர் கைது! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம் கடல்பகுதியில் இருந்து இலங்கை நோக்கி மஞ்சள், தங்கம், பீடி இலைகள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடல் வழியாக அடிக்கடி சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றன.

இதனை தடுக்கும் வகையில் கடலோர காவல் படையினர் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் இன்று அதிகாலை, ராமேசுவரம் அருகே உள்ள அரியமான் கடற்கரைப் பகுதியில் கடலோர பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக ஒரு சிறிய படகில் இரண்டு பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தது கவனத்திற்கு வந்தது.

உடனடியாக அவர்களை பிடித்து விசாரித்ததில், இருவரும் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அமல் ராஜ் மற்றும் ராஜ்குமார் என்பதும், இந்திய கடல் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்து மீன்பிடித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.தற்போது அவர்களிடம் க்யூ பிரிவு காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Active patrol sea area Ramanathapuram district 2 Sri Lankan fishermen arrested entering Indian territory


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->