பிரதமர் மோடி குஜராத் பயணம்: இரண்டு நாட்களில் ரூ.5,400 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார்.
Modi will inaugurate projects worth Rs 5400 crore in Gujarat
அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, ஆமதாபாத் செல்லவுள்ளார். அங்கு அவர், ரூ.5,400 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்து அர்ப்பணிக்கவுள்ளார்.
அதன்படி, நாளை ஆகஸ்ட் 25, 26-ஆம் தேதிகளில் குஜராத்திற்கு செல்லவுள்ளார், நாளை (ஆகஸ்ட் 25) மாலை 06 மணியளவில் ஆமதாபாத்தில் உள்ள கோடல்தாம் மைதானத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். அதன் பின்னர் பொது நிகழ்ச்சியிலும் ஒன்றிலும் உரையாற்றவுள்ளார்.

அடுத்ததாக, ஆகஸ்ட் 26-ஆம் தேதி காலை 10:30 மணியளவில், ஆமதாபாத்தின் ஹன்சல்பூரில், பிரதமர் மோடி 100 நாடுகளுக்கு பேட்டரி மின்சார வாகன ஏற்றுமதியைத் தொடங்கி வைக்கவுள்ளார். இது பசுமை எரிசக்தி துறையில் இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்றுவதற்கான ஒரு மைல்கல் ஆகும். இந்த நிகழ்விலும் பிரதமர் உரையாற்றவுள்ளார்.
அங்கு, அவர், ரூ.1,400 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல ரயில் திட்டங்களை தேசத்திற்காக அர்ப்பணிக்கவுள்ளார். அத்துடன், அங்கு, நீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை அமைப்புகளை வலுப்படுத்த முக்கிய நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Modi will inaugurate projects worth Rs 5400 crore in Gujarat