இட்லி கடை படத்தின் செகண்ட் சிங்கள் எப்போ release தெரியுமா...?
Do you know when second single movie Idli Kadai released
பிரபல தமிழ் திரையுலக நடிகர் 'தனுஷ்' இயக்கத்தில் 4-வது படமாக உருவாகியுள்ள படம் 'இட்லி கடை' . இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நடிகர் 'அருண் விஜய்' இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.மேலும், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இதற்கு முன்பாகவே வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது படத்தின் அடுத்த பாடலான ''என்சாமி தந்தானே'' பாடலை வரும் விநாயகர் சதூர்த்தி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
English Summary
Do you know when second single movie Idli Kadai released