துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை கன்னியாகுமரிக்கு செல்லவுள்ளார்..!
Deputy Chief Minister Udhayanidhi Stalin will visit Kanyakumari tomorrow
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (06-ஆம் தேதி) காலை தென்காசி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்லவுள்ளார்.
திமுக சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் தலைமையில் நாளை அவருக்கு நாகர்கோவில் அண்ணா சிலை முன்பு வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அதஹ்யனை தொடர்ந்து. குலசேகரம் அருகே கல்லடிமாமூடு பகுதியில், கடந்த 24-ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த மினி ஸ்டேடியத்திற்கும் உதயநிதி செல்லவுள்ளார்.

அங்கு அவர், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உடன் உரையாடிவிட்டு, அங்கிருந்து குளச்சல் நகரில் திமுக அயலக அணி மாநில துணை செயலாளர் பாபு வினிபிரட் ஏற்பாட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கவுள்ளார்.
அதன் பின்னர் அங்கிருந்து இறச்சகுளம் வரும் அவர், அப்பகுதியில் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையை திறந்து வைக்கவுள்ளார்.
அதனை தொடர்ந்து, அங்கிருந்து நேராக திருநெல்வேலி சென்று இரவு தங்கிவிட்டு, 07.03.2026 காலை தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் அணி நிர்வாகிகள் சந்திபில் கலந்துகொள்ளவுள்ளார். அதன் பின்னர் மதியம் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு திரும்பவுள்ளார்.
English Summary
Deputy Chief Minister Udhayanidhi Stalin will visit Kanyakumari tomorrow