சுதந்திர நாளை கொண்டாட ரஷ்யா மீது தாக்குதல் செய்த உக்ரைன்...!தரைமட்டமான அணுமின் நிலையம்...!
Ukraine attacked Russia to celebrate Independence Day nuclear power plant razed ground
கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் ரஷ்யா -உக்ரைன் இருநாடுகளின் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா இருக்கிறது.இருப்பினும் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.

இதனிடையே, இன்று உக்ரைனின் 34வது சுதந்திர தினத்தை அந்நாடு கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் ரஷ்ய அணு மின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.மேலும், இன்று உக்ரைன் ரஷ்யாவின் குர்ஷ்க் பகுதியில் இருக்கும் அணு மின் நிலையம் மீது டிரோன் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் அணு மின் நிலையத்தின் ஒரு பகுதி எரிந்தது. மேலும், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்தனர்.
இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என ரஷ்யா தகவல் அறிவித்துள்ளது.இதற்கு முன்பாகவே கடந்த 3 தினங்களாக தெற்கு ரஷ்யாவில் எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையம் உக்ரைன் டிரோன் தாக்குதலில் தீபற்றி எரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
Ukraine attacked Russia to celebrate Independence Day nuclear power plant razed ground