'தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்; இந்தியாவிலேயே மிகப்பெரிய முரட்டு அடிமை இபிஎஸ் தான்'; உதயநிதி பேச்சு..!
Udhayanidhi criticizes Edappadi Palaniswami as the biggest subservient figure in India
தென் மண்டலக் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, எம்.பி. கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி பேசுகையில் கூறியதாவது: திருவண்ணாமலையில் நடைபெற்ற வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தை, இன்று தென் மண்டலக் கழக இளைஞரணிச் செயலாளர் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் ஓவர்டேக் செய்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த இளைஞர் பட்டாளத்தைப் பார்க்கும்போது, இது நிர்வாகிகள் சந்திப்பா.? அல்லது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வெற்றி மாநாடா..? என உங்கள் எழுச்சியைக் காணும்போது நினைக்கத் தோன்றுகிறது என்று பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
மேலும், கொள்கை என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கூட்டம், இன்றைக்குத் தமிழ்நாட்டில் வெற்றுக்கூச்சல் போட்டு வருகிறதாகவும், இந்தக் கூட்டத்தால் தமிழ்நாட்டிற்கு எந்தப் பயனும் இல்லை என்றும், ஏன், அவர்களால் அவர்களுக்கே எந்தப் பயனும் இல்லை என்று தவெக கட்சியை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
அத்துடன், இந்தியாவிலேயே ஒரு கட்சியின் இளைஞரணிக்கு 05 லட்சம் நிர்வாகிகளும், 50 லட்சம் உறுப்பினர்களும் கொண்ட ஒரே இயக்கம் தி.மு.க.தான் என்று தெரிவித்துள்ளதோடு, அரசியல் அறிவே இல்லமால் சில அட்டைகள் கத்தினாலும், உளறினாலும் களத்தில் வெற்றிப் பெறபோவது தி.மு.க. தான் என்று கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
மேலும், பாசிஸ்டுகள் எவ்வளவு முயற்சி செய்தாலும் தமிழ்நாடு உங்களுக்குக் கிடையாது என்று, தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான் என்று அதிமுக -பாஜக கூட்டணியையும் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
அத்துடன், இபிஎஸ் அவர்களே தலையை நிமிர்த்தி வழியை பார்த்து நடந்தால்தான் நேராக நடக்க முடியும். நீங்கள் மோடியின் காலையும், அமித்ஷாவின் காலையும் பார்த்துக் கொண்டே நடந்தால் உங்களை போல் முட்டுச் சந்தில்தான் போய் நிற்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார்.
அத்துடன், முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்கள் கேள்விப்பட்டிருப்பீங்க.. முரட்டு அடிமைகள் தெரியுமா..? எடப்பாடி பழனிசாமிதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய முரட்டு அடிமை என்று இகவும் மோசமாக விமர்சித்து பேசியுள்ளார்.
English Summary
Udhayanidhi criticizes Edappadi Palaniswami as the biggest subservient figure in India