அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்..!
Former AIADMK functionary VS Babu joined the TVK party
வடசென்னையின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் எம்எல்ஏவுமான வி.எஸ்.பாபு தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
சென்னை புரசைவாக்கம் பகுதியில் திமுக எம்.எல்.ஏ.வாக செயல்பட்டவர் இவர் வடசென்னை திமுக மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்தவர். அதன் பின்னர், திமுகவில் இருந்து விலகிய அதிமுகவில் இணைந்தார்.
அதிமுக வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் பொறுப்பு வி.எஸ்.பாபுவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் ஜுன் அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வி.எஸ்.பாபு நீக்கப்பட்டார்.
இந்நிலையில், வி.எஸ்.பாபு இன்று தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.
English Summary
Former AIADMK functionary VS Babu joined the TVK party