டி20 உலகக் கோப்பை: நடப்பு சாம்பியன் இந்தியாவை திணறவைத்துள்ள USA; அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்; தனி ஒருவனாக அசத்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ..! - Seithipunal
Seithipunal


10-வது ஐசிசி ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்ற இந்த போட்டியில் முதல் நாளில் 3 போட்டிகளில் 02 போட்டிகள் முடிவடைந்துள்ளது. அதில், முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணியும், 02 ஆவது போட்டியிலும் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது. 

03-வது போட்டி, இன்று இரவு 07 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி அமெரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தனது முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். 

06 ஆவது ஓவரில் மட்டும் 03 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது.  இதில் இஷான் கிஷன் 20 ரன்னிலும்,  திலக் வர்மா 25 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து, துபே முதல் பந்தில் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். 

அடுத்ததாக இறங்கிய ரிங்கு சிங் 06 ரன்னிலும் அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்ட்யாவும் 05 ரன்னிலும்,  அக்சர் 14 ரன்னிலும் ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். தனி ஒருவனாக போராடிய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் நிதானமாக ஆடி, அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 08 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 161 ரன்கள் அடித்தது. சூர்யகுமார் 84 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தற்போது இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய அமெரிக்க அணி, 05 ஓவர்களில் 03 விக்கெட்டினை இழந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India sets a target of 162 runs for the USA in the T20 World Cup match


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->