அமித் ஷா கருத்துக்கு எதிர் கருத்து தெரிவித்த நயினார்...! இபிஎஸ் தான் எல்லா முடிவும் எடுப்பார்...!
Nayinar expressed his opposition Amit Shahs statement EPS take decisions
மத்திய அமைச்சர் அமித் ஷா, திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் நடைபெறும் மண்டல பூத் கமிட்டிக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது,"தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும்" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில்,இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தெரிவித்ததாவது, "தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் இபிஎஸ்தான்.
கூட்டணி ஆட்சி குறித்து இபிஎஸ்தான் முடிவெடுப்பார். இபிஎஸ்தான் எங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா தெரிவித்திருந்த நிலையில் நயினார் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளது அந்த அரசியல் வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Nayinar expressed his opposition Amit Shahs statement EPS take decisions