நடத்தை சரியில்லை என்ற காதலன்... விபரீத முடிவு எடுத்த மாற்றுத்திறனாளி காதலி...! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


சென்னையில் வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் 26 வயதான தர்ஷன் என்பவர்.இவர், பாரிமுனையில் ஹார்டுவேர்ஸ் டீலர்ஷிப் தொழில் செய்து வருகிறார்.

இதனிடையே,இவரும், ராயபுரம் பகுதியில் வசித்து வந்த 25 வயதான 'ஹாசிதா' என்பவரும் காதலலித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 1½ ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலேயே அதாவது (live-in relationship )வாழ்ந்து வந்தனர்.

ஆனால் தற்போது இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர்.அதனால்,கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி அண்ணாநகரில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதில் ஹாசிதா ஒரு மாற்றுத்திறனாளி.இவருக்கு சிறுவயது முதலே இடதுகால் ஊனமுற்றத்துடன் இருக்கிறார்.

இந்த சூழலில் தான் நிச்சயதார்த்தம் முடித்து திருமண ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.இதைத் தொடர்ந்து தர்ஷனும், ஹர்சிதாவும் எப்போதும் போல பேசி பழகி வந்துள்ளனர். இதனிடையே, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தர்ஷன் ஹர்சிதாவுக்கு தொலைபேசியில் அலைத்து," உனது நடவடிக்கை  சரியில்லை.

நீ எனக்கு வேண்டாம். உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது" என்று தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஹர்சிதா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்த ஹர்சிதா," நான் தர்ஷனுடன் சேர்ந்து வாழ்வதற்கு விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து  வேப்பேரியிலுள்ள தர்ஷனின் வீட்டில் வைத்து இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போதும் தர்ஷன் மனம் மாறாமல் ஹர்சிதாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த பேச்சைக் கேட்டு மிகவும் மனமுடைந்த ஹர்சிதா 7-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி வேப்பேரி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

boyfriend who behaved badly disabled girlfriend who made terrible decision What happened


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->