என்ன காரணத்தினால் ஜெலன்ஸ்கி இந்தியா வர இருக்கிறார்...?
Why Zelensky coming India
கடந்த 3 ஆண்டுகளாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் நீடித்து வருகிறது. இதில் அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் போரை ஆதரிக்கும் விதமாக ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு 50 % வரிவிதித்து அதிர்ச்சியளித்தார்.
இதனிடையே, விரைவில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இந்தியா வர இருப்பதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் 'போலிஷ்சுக்' அறிவித்துள்ளார்.
இந்த பயணத் தேதியை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.இதற்கு முன்னதாக ரஷ்ய அதிபர் புதின் விரைவில் இந்தியா வர திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்த சந்திப்பு நிகழுமா? அல்லது வெறும் தகவலுடன் நிற்றுவிடுமா? என்று பல கேள்விகள் மக்களிடையே எழுகின்றன.
English Summary
Why Zelensky coming India