உஷார் கேரளா மக்களே! பொளக்கப்போகும் கனமழை! 26, 27ஆம் தேதி மோசமான வானிலை...!
Beware people Kerala Heavy rains coming Bad weather 26th and 27th
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு வங்கக்கடலில் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக கேரள மாநிலத்தில் வருகிற 26 மற்றும் 27-ந் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதில் வயநாடு, கண்ணூர், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு 26-ந் தேதி மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி,கர்நாடகா, கேரளா மற்றும் லட்சத்தீவு கடற்கரைகளில் 26, 27-ந் தேதிகளில் வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என்பதால், காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆகையால்,மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும்வருகிற 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கேரளாவில் ஒன்று அல்லது 2 இடங்களில் 7 முதல் 11 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆகையால் மக்கள் பாதுக்காப்பாக இருக்க கேரள அரசு அனைத்து பணிகளையும் செய்து வருகிறது.
English Summary
Beware people Kerala Heavy rains coming Bad weather 26th and 27th