ரஷ்யாவிடம் உதவி கேட்ட பாகிஸ்தான்! மிரட்டல் விடுத்த நிலையில் அந்தர் பல்டி!
Pakisthan Russia India
காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22-ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி பயணிகள் உயிரிழந்த சம்பவதி எதிரொலியாக இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
போர் சூழல் உருவாகும் நிலையில், பாகிஸ்தான் ரஷ்யாயின் உதவிய நாடியுள்ளது. ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி, “பாகிஸ்தான் மற்றும் இந்தியா இரண்டும் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவை பேணிக்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், இருநாடுகளுக்கும் இடையே அமைதி நிலவ ரஷ்யா நடுநிலையுடன் நடுவர் நிலை வகிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
அதே சமயத்தில் அவர், "இந்தியா எங்கள் நாடு மீது தாக்குதல் மேற்கொண்டால், எங்களது முழு பாதுகாப்பு திறனையும் பயன்படுத்துவோம். வழக்கமான ஆயுதங்களோடு அணு ஆயுதங்களும் பயன்படுத்தப்படலாம்" என மிரட்டல் விடுக்கும் வகையில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.