நீட் தேர்வு பயிற்சி மாணவி தற்கொலை!
NEET student commits suicide
2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோட்டா நகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் ஷியோப்பூர் நகரை சேர்ந்த மாணவி ஒருவர் 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.ராஜஸ்தானின் கோட்டா நகரில் தங்கி நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த அந்த மாணவி நீட் தேர்வுக்கு முந்தைய நாள் அதாவது சனிக்கிழமை இரவு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.நீட் தேர்வுக்கு முந்தைய நாள் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோட்டா நகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்துகொண்டமாணவி 10-ம் வகுப்பு வாரிய தேர்வில் 92 சதவீத மதிப்பெண்களை பெற்றார். மகள் படிப்பதற்காக அவரது தந்தை ஆசிரியரான சுரேஷ், கோட்டா நகரில் வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார்.
அதில், தங்கி அவருடைய குழந்தைகள் படித்து வந்துள்ளனர். 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த அந்த மாணவி கடந்த சனிக்கிழமை மாலை பெற்றோர் இருவரும் சந்தைக்கு போன நேரத்தில், அந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து உள்ளார் என குன்ஹாதி காவல் நிலைய வட்ட ஆய்வாளர் அரவிந்த் பரத்வாஜ் கூறினார்.
தற்கொலைக்கான காரணம் விசாரணைக்கு பின்னரே அதுபற்றி தெரிய வரும் என போலீசார் கூறினார்.கடந்த 30 நாட்களில் இது 4-வது சம்பவம் ஆகும். கடந்த ஆண்டு, கோட்டா நகரில் பயிற்சி மேற்கொள்ளும் மாணவ மாணவிகளில் 17 பேர் தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
English Summary
NEET student commits suicide