மேடையில் நடந்த பகீர் சம்பவம் - நொடியில் உயிர் தப்பிய ஆ.ராசா.!!
light stand fell down in mayiladuthurai dmk meeting
மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பங்கேற்றார். மேலும், இந்தக் கூட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.
இதையடுத்து ஆ.ராசா பொதுக் கூட்டத்திற்காக மேடையில் அமைக்கப்பட்டிருந்த மைக் மேஜை அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் மேடையின் எதிரே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மின்விளக்கு தூண் திடீரென சாய்ந்தது.

நேற்று தமிழகம் முழுவதும் காற்றுடன் மழை பெய்ததால், பொதுக்கூட்டத்திற்காக கட்டப்பட்டிருந்த ஹாலோஜன் விளக்கு கம்பம் காற்றில் சரிந்து விழுந்தது. விளக்குத்தூண் விழுவதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட ஆ.ராசா அங்கிருந்த உடனடியாக விலகி ஓடி உயிர் தப்பினார்.
மேடையில் பேசிக்கொண்டிருந்த போது திடீரென மின்விளக்கு கம்பம் விழுந்ததைக் கண்டு மேடையில் இருந்த திமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
light stand fell down in mayiladuthurai dmk meeting