திருவிழா நடத்துவதில் பிரச்சனை..SP யிடம் புகார் அளித்த கிராமமக்கள்!
Problem with the festival Villagers complain to SP
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அஞ்சுகிராமம் அடுத்த மேட்டுக்குடியிருப்பு அருள்மிகு சிவ சுடலைமாட சுவாமி திருக்கோவில் அறக்கட்டளை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக தலைவர் மாணிக்கராஜ் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறியிருப்பதாவது: -
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா அஞ்சு கிராமம் வில்லேஜ் மேட்டு குடியிருப்பு ஊரில் அருள் மிகு சிவ சுடலை மாடசாமி திருக்கோவில் உள்ளது இக்கோவிலில் ஊர்மக்கள் நிர்வாகிகள் இணைந்து கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டுதோறும் திருவிழா நடத்துவது வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு ஊர் மக்களுக்கும் தனிநபர் ஒருவருக்கும் சாமி ஆடுவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சமீப காலமாகவே போலீஸ் பாதுகாப்புடன் திருவிழா நடத்தப்படுகிறது.
ஊர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் காலமானது மூணு ஆண்டுகளாகும் ஏற்கனவே இருந்த நிர்வாகிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததன் காரணமாக கடந்த 2024 ஆம் ஆண்டு ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதன் அடிப்படையில் எங்களது அருள்மிகு சிவ சுடலைமாடசாமி திருக்கோவில் அறக்கட்டளை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னும் அந்த அறக்கட்டளை சார்பாக ஆண்டுதோறும் திருவிழா நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது மேலும் தனிநபர் பிரச்சினையின் காரணமாக கோவில் திருவிழா நடத்த சமீப காலமாக போலீஸ் பாதுகாப்புடன் திருவிழா நடத்தப்பட்டது அதனால் இனிவரும் காலங்களில் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து திருவிழா நடத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது அதனை அறிந்து கொண்ட சில கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்களும் எங்கள் ஊரைச் சார்ந்த சமுத்திரம் என்பவர் மகன் முத்துகிருஷ்ணன் சாமிக்கண் நாடார் மகன் கணேசன் மற்றும் செல்ல நாடார் மகன் வீர செல்வன் ஆகியோர்கள் கோயில் நிர்வாகத்தில் தலையிட்டு வருகின்றனர்.
இவர்களின் தலையீடு காரணமாக கோயில் நடைமுறை மற்றும் விழாக்களில் தேவையில்லாத பிரச்சினை ஏற்படும் நிலை உள்ளது. மேலும் சட்டத்திற்கு புறம்பாக ஊரின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டி கெட்ட எண்ணத்தில் வேண்டும் என்றே ஊர் பொதுமக்களின் ஒப்புதலின்றி கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்களின் தூண்டுதலின் பேரில் 02. 05. 2025 முதல் 10 .05 .2025 வரை திருவிழா நடத்த போவதாக கூறி ஒரு போலியான கொடை விழா அழைப்பிதழ் அச்சடித்து பொதுமக்களின் மத்தியில் வதந்தியை பரப்பி அதனை வழங்கி வருகிறார்கள் நாங்கள் திருவிழா நடத்த முன்னேற்பாடுகள் செய்து வைத்திருந்த நிலையில் மேற்படி நபர்கள் திருவிழா நடத்த இடையூறுகள் செய்து வருகிறார்கள்.
இது தொடர்பாக அஞ்சு கிராமம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் எந்த விதமான முறையான விசாரணையும் இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை அதனால் மேற்படி நபர்கள் மேற்படி தேதியில் திருவிழா நடத்த அனுமதிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். எனவே எங்கள் முன்னோர்கள் கூறியதின் அடிப்படையில் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேல் நடைமுறையில் உள்ள பாரம்பரிய சம்பிரதாயங்களில் படி ஊர் பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையுடன் திருவிழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும் மத நடைமுறைகளை புறக்கணிக்காத வகையில் எங்கள் உள்ளூர் மக்களின் உணர்வில் கலந்துள்ள அருள்மிகு சிவ சுடலைமாடசாமி திருக்கோவில் திருவிழாவில் நடத்த மேற்படி நபர்கள் ஏற்படுத்திய தேதியை மாற்றி அமைத்து ஊர் பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து திருவிழா வினை நடத்த அனுமதி வழங்கும் படி அவர்கள் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. உடன் மேட்டுக்குடியிருப்பு ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் மனு அளிக்க வந்தனர்.
English Summary
Problem with the festival Villagers complain to SP